செய்தி விவரங்கள்

கருணாநிதியை நம்பி வந்த தமிழர்களுக்கு நேர்ந்த கதி !!!

கருணாநிதியை நம்பி வந்த தமிழர்களுக்கு நேர்ந்த கதி !!!

 

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகளை பாரதீய ஜனதாக் கட்சி கண்டித்துள்ளது. மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன், நேற்று தமிழகத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இலங்கை தமிழர் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிக்கொடுப்பை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அன்று அங்கம் பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி, இலங்கை தமிழர்களுக்காக என்று கூறி உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். இதன்பின்னர் போர் முடிந்துவிட்டதாக கூறி உணவுத்தவிர்ப்பை விலக்கிக்கொண்டார். இந்தநிலையில் அவரை நம்பி வெளியில் வந்த பல தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்று ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் போர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியுள்ள கருத்து தொடர்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய தலைவரின் கருத்தை அறிய விரும்புவதாகவும் அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்