செய்தி விவரங்கள்

இலங்கையை புதிய ஏகாதிபத்தியத்திற்குள் சிக்கவைக்கும் சீனா ???

இலங்கையை புதிய ஏகாதிபத்தியத்திற்குள் சிக்கவைக்கும் சீனா ???


சீனாவினால், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அந் நாடுகளை சீனா புதிய ஏகாதிபத்திய வழிமுறைக்குள் சிக்க வைக்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையின் பிரதான துறைமுகம் ஒன்றை சீனா 99 வருட குத்தகை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டிருப்பது இந்த நடவடிக்கையின் உச்சமான சந்தர்ப்பம் என அமெரிக்க செனட் உறுப்பினரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிரேஷ்ட ஆலோசகருமான டோட் யான்க் தெரிவித்துள்ளார்.

எனினும் அமெரிக்கா இதற்கு முற்றிலும் வேறுபாடான பொருளாதார நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சீனா, குறித்த நாடுகளில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் ஊழியர்களாக சீனர்களை பயன்படுத்தி வருகிறது. ஆனால், அமெரிக்கா வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களில் அந்நாடுகளை சேர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.