செய்தி விவரங்கள்

அகதிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை !!!

அகதிகளுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை !!!

 

படகுகள் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடரும் என அவுஸ்திரேலிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவுஸ்திரேலிய எல்லைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை கமாண்டரும் விமானப்படைத் துணைத் தளபதியுமான Stephen Osborne எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“அவுஸ்திரேலியா தனது எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை, கடல்படை மற்றும் விமானப்படை ஆகியன அவுஸ்திரேலிய எல்லையை நோக்கிவரும் சந்தேகத்துக்கிடமான படகுகளை கண்டுபிடித்து அவற்றை இடைமறிப்பதற்கான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அவுஸ்திரேலியா தனது எல்லைகளைப் பாதுகாப்பதிலும் ஆட்கடத்தலை தடுப்பதிலும் மிகவும் உறுதியாகவுள்ளது.

ஆட்கடத்தல்காரர்களின் பொய்களை நம்பாதீர்கள். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வர முயற்சி செய்யும் எவரும் ஒருபேதும் அவுஸ்திரேலியாவை தமது வாழ்விடமாக்க முடியாது” எனக் கூறியுள்ளார். படகுகள் வழியாக வர முயற்சிக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை தமிழ், இந்தி, பெங்காலி, பர்மீஷ், ரோஹிங்கியா, சிங்களம், அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் விடுக்கப்பட்டுள்ளது.