செய்தி விவரங்கள்

மீண்டும் நாட்டில் போர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது !!!

மீண்டும் நாட்டில் போர் ஏற்படுவதை தவிர்க்க முடியாது !!!

 

புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்பு உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தியா சென்ற குழுவில், சம்பந்தனும் பங்கேற்றிருந்தார்.

இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சம்பந்தன் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பு குறித்து இந்திய ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய போது, அரசியல் தீர்வு குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.

யுத்தம் முடிவுக்கு கொணடு வரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இது வரையிலும், அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. அபிவிருத்தி நடவடிக்கைகள் மாத்திரம் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில், அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம் ஈடுபடுகின்றது. எனினும், இனவாதிகள் அதனைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. இதைத் ஒருபோதும் தவிர்க்க முடியாது. எவ்வாறாயினும், புதிய அரசியல் அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை தனக்கு உண்டு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.