செய்தி விவரங்கள்

இலங்கைக்கு படையெடுத்த 15 இலட்சம் வெளிநாட்டவர்கள் !!!

இலங்கைக்கு படையெடுத்த 15 இலட்சம் வெளிநாட்டவர்கள் !!!

 

இலங்கைக்கு கடந்த 8 மாதங்களில் 15 இலட்சத்து 82 ஆயிரத்து 835 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. அதேவேளை ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 359 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 928 சுற்றுலாப் பயணிகளே விஜயம் செய்திருந்தனர். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 4.9 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு, முதல் 8 மாதங்களில் வருகை தந்தை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 12.5 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா, சீனா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.