செய்தி விவரங்கள்

போர் ஒத்திகையின் போது நடந்த விபரீதம் !!!

போர் ஒத்திகையின் போது நடந்த விபரீதம் !!!

 

எஸ்தோனிய நாட்டில் போர் ஒத்திகையின்போது ஸ்பெயின் போர் விமானம் ஒன்று தவறுதலான ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. தெற்கு எஸ்தோனியாவில் ஒத்திகை இடம்பெறும் பகுதியிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை வானில் இருந்து வானை தாக்கும் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது. 10 கிலோகிராம் வெடிபொருளை சுமந்த அந்த ஏவுகணையால் எவருக்கும் உயிராப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை எந்த விமானத்தையும் தாக்காமல் ஆபத்தின்று தரையில் விழுந்துள்ளது. “உயிராபத்து ஏற்படாததற்கு இறைவனுக்கு நன்றி” என்று தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் எஸ்தோனிய பிரதமர் ஜூரி ரடாஸ், இந்த சம்பவம் “மிக வருந்தத்தக்கது” என்றும் கூறியுள்ளார். நேட்டோவின் பால்டிக் பாதுகாப்பு நடவடிக்கையில் ஸ்பெயின் போர் விமானங்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.