செய்தி விவரங்கள்

ராட்சத முதலையுடன் பட்டம் பெற்றதை கொண்டாடிய இளம்பெண் !!!

ராட்சத முதலையுடன் பட்டம் பெற்றதை கொண்டாடிய இளம்பெண் !!!

 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தான் கல்லூரியில் பட்டம் பெற்றதை ராட்சத முதலையுடன் கொண்டாடியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேந்தவர் Makenzie Noland. 21 வயதாகும் Makenzie A&M பல்கலைகழகத்தில் வனவிலங்கு சூழலியல் துறை பயின்று வந்தார். கடந்த மே மாதத்துடன் படிப்பை முடித்த Makenzie, the Gator County rescue centre-ல் சில நாட்கள் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் தன்னுடைய துறையில் பட்டம் பெற்ற Makenzie, தான் பயிற்சி பெற்ற இடத்திற்கு சென்று அங்கிருக்கும் 11அடி நீளமுள்ள முதலையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தன்னுடைய பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, உறவினர்கள் அனைவரும் ஷேர் செய்து பெருமளவில் வைரலாக்கியுள்ளனர். காண்போர் கண்களுக்கு அதிச்சியளிக்கும் இந்த காணொளி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.