செய்தி விவரங்கள்

சுடுகாட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் மரணித்த மனிதர்கள் !!!

சுடுகாட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் மரணித்த மனிதர்கள் !!!

 

அமெரிக்காவில் உள்ள சுடுகாட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள விதம் குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ள்து. New Orlean நகரில் உள்ள பழமையான சுடுகாட்டில் ஒரு விசித்தரமான நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சுடுகாட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் மரணித்த மனிதர்கள் !!!

அதாவது உயிரிழந்தவர்களின் சடலங்களை உறவினர்களும், நண்பர்களும் எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு வருவார்கள். அங்கு உடனேயே சடலங்கள் புதைக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக இறந்தவர்களுக்கு பிடித்த உடைகள் அவர்களுக்கு மாட்டப்படுகிறது. இறந்தவர்கள் எப்படி தங்கள் வீட்டில் ஜாலியாக இருப்பார்களோ அது போலவே சுடுகாட்டில் இருக்க வைக்கப்படுகிறார்கள்.

அதாவது, நோலா என்பவர் சமீபத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். அவரின் சடலம் குறித்த சுடுகாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவருக்கு பிடித்த உடை உடுத்தப்பட்டது. சேரில் அமரவைக்கப்பட்ட நோலாவின் சடலம் அருகில் குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கப்பட்டது. இப்படி தான் நோலா தனது வீட்டில் இருப்பாராம். இதை போல இறந்தவர்கள் எப்படி இருப்பார்களோ அது போல அவர்கள் வைக்கப்படுகிறார்கள்.

சுடுகாட்டில் உயிரோடு உட்கார்ந்திருக்கும் மரணித்த மனிதர்கள் !!!

இதை பார்த்தால் அவர்கள் இறந்துவிட்டார்கள் என யாரும் சொல்ல மாட்டார்கள், அப்படியே உயிரோடு இருப்பதை போலவே தோன்றும். இது போன்ற விடயங்கள் இறந்தவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த விடயங்கள் எல்லாம் முடிந்தபின்னர் சடலங்கள் புதைக்கப்படுகிறது.