செய்தி விவரங்கள்

வெளிநாடு ஒன்றை உலுக்கிய மிகப்பெரிய பாலியல் துஷ்பிரயோக வழக்கு!

நோர்வேயின் மிகப்பெரிய பாலியல் துஷ்பிரயோக வழக்கு என போலீசாரால் விவரிக்கப்பட்ட வழக்கொன்றில் 26 வயது நபர் ஒருவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டுள்ளார்.

உதைப்பந்தாட்ட நடுவரான இவர் பல ஆண்டுகளாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 300 க்கும் அதிகமான சிறுவர்களை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த துஷ்பிரயோக சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் பிரதானமாக நோர்வே, சுவீடன் மற்றும் டென்மார்க்கில் உள்ளவர்கள் என்றும் அவர்கள் இணையத்தளங்களினூடாகவே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

எனினும் பல சிறுவர்கள் இந்த நபரை நேரில் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வே அறிக்கையின்படி, பெண்ணாகத் தன்னை அடையாளம் காட்டிய நபர் சாண்ட்ரா அல்லது ஹென்ரியேட்டா என்ற பெயர்களில் சிறுவர்களின் நம்பிக்கையைப் பெற்றபின்னர் அவர்கது ஆடையில்லாத நிழற்படங்கள் மற்றும் கானொளிகளையும் இணையத்தளமூடாகப் பெற்றுள்ளார்.

இந்த நிழற்படங்கள் மற்றும் கானொளிகளைப் பெற்றுக்கொள்ள சன்மானம் வழங்குவதாகத் தெரிவித்து பின்னர் அவர்களை அச்சுறுத்தி மேலும் பல படங்களையும் கானொளிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

நோர்வே பொதுசன ஒளிபரப்பான NRK இவ்வாறான 16,000 க்கும் மேற்பட்ட காணொளிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

15 பேரைக்கொண்ட விசாரணைக் குழுவினர் இந்த வழக்கில் பணிபுரிந்துள்ளதோடு ஏராளமான நிழற்படங்கள் காணொளிகள் மற்றும் குறுஞ்செய்திகளை பகுப்பாய்வு செய்துள்ளனர்.

சந்தேக நபர் 2016 ல் கைது செய்யப்பட்டு விரைவில் விடுதலைசெய்யப்பட்ட நிலையில் இரண்டாவது தடவையாகக் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் அவர் ஒஸ்லோவுக்கு அருகே உள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளி ஆரம்பம் முதலே போலீசாருடன் விசாரணைகளின் போது ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும் தற்சமையம் மன நோய்க்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு 2019 ல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.