செய்தி விவரங்கள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதையும் மீறி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் முயற்சியில் பாதுகாப்பு படை ஈடுபட்டுள்ளது.


இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சஃப்னாக்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்புவதற்காக பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுத்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.