செய்தி விவரங்கள்

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள அவசர சிகிச்சைக்கான மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில், இறந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு மேற்கொள்ள தலைநகர் காபுலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளின் இந்த மர்ம மரணத்துக்கான வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.