செய்தி விவரங்கள்

அழியப்போகிறதா உலகம் ??? அதிர்ச்சி அறிக்கை !!!

அழியப்போகிறதா உலகம் ??? அதிர்ச்சி அறிக்கை !!!

 

பூமி விரைவில் மனிதர்கள் மட்டுமல்ல உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நரகமாக மாறிவிடும் அபாயம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பூமியில் சமீபகாலமாக வெப்பநிலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையை தொடர்ந்தே அவர்கள் இவ்வாறான எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர்.

இதுதொடர்பில் தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், ”மனிதர்கள் நம்மைப்போல், நாம் வாழும் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரனங்கள் வசித்து வருகின்ற நிலையில் மனிதனின் முன்னோக்கான பாதையின் காரணமாக இயற்கையினை பலியிடுவதன் மூலம் நமக்கு நாமே ஆபத்தை விளைவிக்கின்றோம்.” என்றனர்.

மேலும், விரைவில் நாம் வாழும் பூமி வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும் அபாயம் காணப்படுவதாகவும், இயற்கையானது மனிதர்களை திரும்ப தாக்கும் எனவும் பருவநிலை மாற்றம் தொடர்பில் ஆராயும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் வெப்பத்தின் வீடாக பூமி மாறிவருவதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த அறிக்கையில், இப்போத நம்மை காப்பாற்றி வரும் இயற்கை வளங்கள் தற்பொது அதிகரித்து வரும் வெப்பத்தினால், சூழலுக்கு பாதமாக மாற்றடையும் என குறிப்படப்பட்டுள்ளது. இப்போது கார்பனீரொக்சைட்டை உள்வாங்கும் அமேசான் மழைக்காடுகள் வெப்பநிலை உயர்வின் ஒரு கட்டத்தில் கார்பனீரொக்சைட் வயுவை மீள உமிழ ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மாற்றமுடியாத மாற்றத்திற்கு வித்திடும் எனவும், இதனை ஒரு பொது மீள் சரிசெய்ய முடியாதளவு மாற்றமாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிததுள்ளனர். அத்துடன், வெப்பநிலை உயர்வினால், கடல்மட்டம் 10 முதல் 60 மீட்டர் வரை உயர்வடையும் ஆபத்து காணப்படுகின்றமையினால், பல பகுதிகள் இந்த புவியில் வாழத் தகுதியற்றதாக மாறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் மனித சந்ததி இந்த பூமியில் நிலைத்திருக்க வேண்டும் என்றாலும் பூமி உயிரினங்கள் வாழ்வதற்குரிய அமைவிடமாக விளங்குவதனை உறுதிப்படுத்துவதற்கு முயற்சிகளை இப்பொழுதிருந்ததே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். புதைபடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை நிறுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், காடுகளை காப்பது, அதிக அளவிலான மரங்களை நடுவது, மற்றும் குறிப்பாக பூமியுடனான நம் உறவைச் சீர் செய்து கொள்வது மூலமாக எதிர்வரும் அபாயத்திலிருந்து பூமியையும் நம்மையும் காப்பாற்றிக்கொள்ளலாமென அவர்கள் தீர்வினை வெளியிட்டுள்ளனர்.

சமீபகாலமாக அதிகரித்து வரும் வெப்பநிலை சர்வதேச நாடுகளை மிக மோசமாக பாதித்துள்ளது. இத்தாலி, பிரான்ஸ், மற்றுமு் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பெரும் பாகங்கள் மற்றும் ஆசிய நாடுகள் வெப்பத்தின் தாக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் வெப்பநிலை முன்னெப்போதும் இல்லாத வகையில் 40 செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் குறித்து ஆராயும் விஞ்ஞானிகளால் பூமியின் நமது இருப்பு குறித்து எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.