செய்தி விவரங்கள்

தற்கொலையைத் தூண்டும் அதிர்ச்சிக் காரணம் கண்டுபிடிப்பு !!!

தற்கொலையைத் தூண்டும் அதிர்ச்சிக் காரணம் கண்டுபிடிப்பு !!!

 

உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தற்கொலை குறித்து விஞ்ஞானிகளால் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. தற்கொலையை ஏன் மனிதர்கள் நாடுகிறார்கள்?, தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு தற்கொலைதான் காரணமா?, தற்கொலையை தூண்டுவதற்கு ஏதுவாய் அமைந்துள்ள காரணிகள் என்ன என்பது பற்றியெல்லாம் விஞ்ஞானிகளும் உளவியலாளர்களும் ஆய்வுக்கு உட்படுத்திவருகின்றனர்.

எவ்வளவுதான் பரிகாரங்கள் பாதிக்கப்பட்டோர்க்குக் கொடுத்தாலும் தற்கொலையை உலகிலிருந்து கட்டுப்படுத்த முடியவில்லை என்றுதான் சொல்லமுடியும். தற்பொழுது தற்கொலையைத் தூண்டும் காரணம் குறித்து விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது பூகோளத்தில் வெப்ப நிலை அதிகரிப்பு இந்த தற்கொலையை தூண்டுவதாக சொல்லியுள்ளனர்.

எப்படி?

சூழலில் வெப்பம் அதிகரித்தால் உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மையாகும். இந்த வெப்ப நிலை அதிகரிப்பானது, உளநிலையிலும் தாக்கத்தைச் செலுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தொடர்பான ஆய்வின் விபரங்கள் Nature Climate Change என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு மாதத்தில் வெப்பநிலை அசாதாரணமாக அதிகரிக்கும்போது அந்தக் காலப்பகுதியில் தற்கொலை வீதம் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் தற்கொலை வீதம் பற்றிய தரவுகளை ஆராய்ந்த பின்னர் விஞ்ஞானிகள் இந்த முடிவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.