செய்தி விவரங்கள்

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் - அழகிரி !!!

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் - அழகிரி !!!

 

தன்னையும், தனது ஆதரவாளர்களையும் திமுகவில் இணைத்துக்கொண்டால் மு.க ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி. முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவடைந்ததனை அடுத்து அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் பொதுக்குழுவினரால் மு.க ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக்கொண்டனர்.

ஆனால், கூட்டணி சேரவிருந்த கட்சிகள் குறித்தும், ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கருத்துக்கள் தெரிவித்த காரணத்தினால் கடந்த 2014ல் கட்சியை விட்டு நீக்கி வைக்கப்பட்டிருந்த அழகிரி தற்போதும் திமுகவில் சலசலப்பினை தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் அமைதி பேரணியும் நடத்தப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரி " திமுகவில் எங்களை இணைந்துகொண்டால் ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொள்ள தயார்" என தெரிவித்துள்ளார். மேலும், 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் திரளுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.