செய்தி விவரங்கள்

திமுக தலைவராக ஸ்டாலின் தெரிவு !!!

திமுக தலைவராக ஸ்டாலின் தெரிவு !!!

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைவராக மு.கா. ஸ்டாலின் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தி.மு.கவின் பொதுக் குழு இன்று பொதுச் செயலாளர் க. அன்பழகன் தலைமையில் கூடியது. இதன்போது தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பதவிக்கு ஸ்டாலினை தேர்வு செய்வது என்று கடந்த சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேறு யாரும் அப்பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் இருவரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.