செய்தி விவரங்கள்

மைத்திரி - சந்திரிக்காவுக்கு இடையில் மோதல் !!!

மைத்திரி - சந்திரிக்காவுக்கு இடையில் மோதல் !!!

 

சமகால ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளக தகவல்களின் அடிப்படையில் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சந்திரிக்காவின் செயற்பாடு காரணமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்பதி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்திரிக்கா சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை மீறி செயற்பட முயற்சிப்பதாகவும், அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கைகளில் அவசியமற்ற முறையில் தலையிடுவதாகவும், ஜனாதிபதியிடம் நெருக்கமான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தன்னை சந்திப்பதற்கு ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதிக்கு நேரம் ஒன்று வழங்காத அளவுக்கு இந்த பிரச்சினை தீவிரமடைந்தள்ளது. முன் அறிவுப்பு இன்றி ஜனாதிபதியை பார்க்க ஜனாதிபதி மாளிக்கைக்கு சந்திரிக்கா சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி, அவரை பார்வையிட மறுத்துள்ளார். இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.