செய்தி விவரங்கள்

கலைஞரின் அரசியல் சாதனைகள் !

கலைஞரின் அரசியல் சாதனைகள் !

கலைஞர் தனது 14 வயது முதல் அரசியலில் ஈடுபட்டுவந்தவர். ஒரு கட்சியின் 50-வருட காலம் தலைமை பொறுப்பு வகித்த ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான் என்ற பெருமை உள்ளது. 1969-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தி.மு.க வின் தலைவராக இருந்தவர்.

கலைஞரின் அரசியல் சாதனைகள் !

ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை வகித்தவர், முதன்முறையாக 1969ல் அண்ணாதுரை அவர்களை அடுத்து முதலமைச்சர் ஆனார், பின்னர் இறுதியாக 2006-2011 காலக்கட்டத்தில் முதலமைச்சராக பதவி வகித்தார். மற்றும் 6 தலைமுறைகளை கண்ட ஒரே அரசியல் தலைவர் கலைஞர் மட்டும்தான் என்றும் கூறுகின்றனர்.

கலைஞரின் அரசியல் சாதனைகள் !

1957ல் முதன்முறையாக குளித்தலை தொகுதியில் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக(M.L.A) வெற்றிகண்டார், பின்பு இறுதியாக 2016ல் திருவாரூர் தொகுதியின் தேர்தலில் நின்று வெற்றிகண்டார். எனவே மொத்தம் 13 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததும் கலைஞர் மட்டும்தான் என்ற பெருமையும் கொண்டவர்.