செய்தி விவரங்கள்

இளநீரின் வழுக்கையை சாப்படலாமா? கூடாதா?

இளநீரின் வழுக்கையை சாப்படலாமா? கூடாதா?

 அனைவருக்கும் பிடித்தமான ஒருவிஷயம் இளநீர் ஆகும். அதிலும் இந்தியாவில் இது மிகவும் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. எனவே இங்குள்ள மக்களுக்கு இது மிகவும் பரிச்சயப்பட்டது மற்றும் அதிக அளவில் மக்களால் பருகக்கூடிய ஒன்று இளநீராகும்.

இளநீர் பருகுவது மூலம் உடலுக்கு தேவையான அதிக சக்துக்கள் கிடைக்கின்றன, அதிலும் இதயம், வயிறு எரிச்சல், நோய் எதிர்ப்புச்சக்திக்கும், நோய் தொற்றிலிருந்து காப்பதற்காகவும் இளநீர் பயன்படுகிறது. மேலும் இளநீரில் நமது உடலுக்கு தேவையான விட்டமின்கள்,ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது.

எனவே டெங்குக்காய்ச்சல், வைரஸ்க்காய்ச்சல் போன்ற காய்ச்சல்களின் போது மருத்துவர்கள் இளநீர் அதிகமாக பருகுவதன்முலம் நோய் தொற்று குறைகிறது என்று கூறுகின்றனர். எனவே இளநீரில் உள்ள வழுக்கை மற்றும் அனைத்துமே நன்மை தரக்கூடியதாக உள்ளது என்றும் கூறுகின்றனர்.