செய்தி விவரங்கள்

பல புதிய வசதிகளுடன் Galaxy Note 9 !!!

பல புதிய வசதிகளுடன் Galaxy Note 9 !!!

 

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்த இடத்தில் ஹவாவி நிறுவனம் காணப்படுகின்றது. அண்மைக் காலத்தில் அதிகளவான ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்ததன் ஊடாக இவ்வாறு இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

[IMAGE NOT AVAILABLE]

இந்நிலையில் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டிய நிலையில் சாம்சுங் நிறுவனம் இருக்கின்றது. இதனால் அதிரடி வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யவேண்டியுள்ளது. இதற்காக விரைவில் அறிமுகம் செய்யவுள்ள புத்தம் புதிய கைப்பேசியான Galaxy Note 9 இல் 1TB வரையான சேமிப்பு வசதியினை தரவுள்ளது.

[IMAGE NOT AVAILABLE]

அடுத்த வாரமளவில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இக் கைப்பேசியில் நீண்ட நேரம் மின்சக்தியை தரவல்ல 4,000mAh மின்கலமும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.