செய்தி விவரங்கள்

மணியார் குடும்பம் படத்தின் சுவாரசிய தகல்வல்கள்!

மணியார் குடும்பம் படத்தின் சுவாரசிய தகல்வல்கள்!

மணியார் குடும்பம் படத்தில் உமாபதி தம்பி ராமையா, மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி, ராதாரவி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா என்று பலர் இப்படத்தில் நடித்துஉள்ளர்கள். இப்படத்தில் தம்பி ராமையா இயக்குனர் மற்றும் தினேசுடன் இசையமைப்பாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார், மேலும் வியு சினிமாஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.இது சென்ற வாரம் வெளிவந்த படமாகும்.

இப்படத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகின்றார். தம்பி ராமையா இயக்கும் மூன்றவது படம் இது, மேலும் இப்படத்தை தனது மகனுக்காக இயக்கியுள்ளாதாக கூறிஉள்ளார். இதற்கு முன் மனுநீதி(2000) என்னும் படமும் மற்றும் இந்திரலோகத்தில் நான் அழகப்பன்(2008) என்னும் படத்தையும் இயக்கியுள்ளார்.

அனைவருக்கும் அவர் நடிகராக தான் தெரியும், ஆனால் அவர் மிக குறைவாக தான் படங்கள் இயக்கியுள்ளார் என்பதனால் அவர் இயக்குனர் என்பது வெகுவாக யாருக்கும் தெரிவதில்லை, இருப்பினும் அவரது படங்கள் மக்களால் பார்க்கப்பட்டவை ஆகும். மேலும் இப்படத்தின் கதை தம்பி ராமையாவையும் அவரது மகன் உமாபதியையும் சுற்றியே நகர்கிறது என்றும் தகவல்.