செய்தி விவரங்கள்

மீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் !!!

மீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் !!!

 

வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின்படி தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பாடசாலைகள் முதலிடம் பிடித்துள்ளன. அதன்படி யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையும் சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையுமே இந்தச் சாதனை முத்திரையைப் பதித்துள்ளன.

மீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் !!!

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த மகேந்திரன் திகாழொளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த நவாஸ்கன் நதி ஆகியோர் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதேவேளை இரண்டாம் இடத்தினை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த பாலகுமார் ஹரித்திகன் சுஜா 197 புள்ளிகள்மூலம் பெற்றார்.

மீண்டும் கல்வியில் தலைதூக்கிய யாழ்ப்பாணம் !!!

இதேவேளை, கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த நேசிகா சம்தினேஷ் மற்றும் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சுகா சாகீர் மொஹமட் ஆகியோர் தலா 196 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.