செய்தி விவரங்கள்

இலங்கை சிறுவர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல் !!!

இலங்கை சிறுவர்கள் தொடர்பாக அதிர்ச்சி தகவல் !!!

 

இலங்கையில், 43 ஆயிரத்து 714 சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர் எனவும் சப்ரகமுவ மாகாணத்தில் மட்டும், 2,179 பேர் உள்ளனர் எனவும் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலனி லொக்குபோதாகம தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறுவர் தொழிலாளர்கள் குறித்த தகவல்களைத் தாம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், சிறுவர் தொழிலாளர்களற்ற மாகாணமாக சப்ரமுகவ மாகாண சபையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில், தனியார்துறை வர்த்தகர்கள், மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட தேயிலை, இறப்பர், தேங்காய் தோட்ட உரிமையாளர்கள் ஆகியோருக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.