செய்தி விவரங்கள்

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் - மஹிந்த !!!

அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள் - மஹிந்த !!!

 

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தில் சரியான தலைமைத்துவம் இல்லாததே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பிரதான காரணம். நாங்கள் ஆட்சியை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாய் 40 சதமாக இருந்தது. அதற்போது அதன் பெறுமதி 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பை தடுக்க முடியாது போனால் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு உலகின் அனைத்து நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அது இந்தியாவா? அமெரிக்காவா என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. நாட்டில் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இருக்கும் முதலீட்டாளர்களும் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றிபெற முடியுமென நாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.