செய்தி விவரங்கள்

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த ரயில் !!!

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த ரயில் !!!

 

கொழும்பில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 3 ரயில் பெட்டிகளில் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் பயணியில் ஈடுபட்டுள்ளன. இந்த அனர்த்தம் காரணமாக ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

கொழும்பில் திடீரென பற்றி எரிந்த ரயில் !!!