செய்தி விவரங்கள்

புத்தரின் உருவம் பொறித்த புடவையுடன் இலங்கை வந்த பெண் !!!

புத்தரின் உருவம் பொறித்த புடவையுடன் இலங்கை வந்த பெண் !!!

 

இலங்கையில் புத்தரின் உருவம் பொறித்த சாறியை அணிந்த பெண்ணொருவர் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டுள்ளது. சாறியை அணிந்திருந்த குறித்த பெண் இந்தியப் பிரஜை எனவும் அவர் சுற்றுலாப் பயணியாக இலங்கைக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் மாத்தளைப் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வேளையே புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த சாறியை அணிந்திருந்ததாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுடன் பலர் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புத்தரின் உருவம் பொறித்த புடவையுடன் இலங்கை வந்த பெண் !!!

ஸ்பைசி கார்டன் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்ற குறித்த பெண் மீண்டும் திரும்பி வரும்போது வேறு சாறி அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக 119 பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெறவில்லை என மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.