செய்தி விவரங்கள்

மைத்திரியை கொலை செய்ய முயற்சி !!!

மைத்திரியை கொலை செய்ய முயற்சி !!!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கான சதிமுயற்சி தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலேயே பிரதமர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதமரின் உத்தரவுப் பிரகாரம் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைப் பிரிவின் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

எனினும் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறு வெள்ளிக்கிழமை மாலை பொலிஸ் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்திருந்தது.