செய்தி விவரங்கள்

இராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மீட்பு !!!

இராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மீட்பு !!!

 

ஹட்டன் - டன்பார் பகுதியில் டி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 6 ரவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள பூஞ்செடிகளை வளர்க்கும் தோட்டமொன்றில் இருந்து இவை இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகள் மீட்பு !!!

பொது மக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, சம்பவ இடத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தும் கடிகாரமொன்றும் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.