செய்தி விவரங்கள்

பிரபாகரனை சந்திக்க தயாராக இருந்தேன் - மஹிந்த

பிரபாகரனை சந்திக்க தயாராக இருந்தேன் - மஹிந்த

 

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க தான் கிளிநொச்சிக்கு செல்ல தயாராக இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி இந்திய ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்தியாவின் எஸ்.என்.ஐ. செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். நான் பிரபாகரனுக்கு செய்தி அனுப்பியிருந்தேன். பிரபாகரனுக்கு கொழும்புக்கு வர முடியாது என்றால், நான் கிளிநொச்சி வருகிறேன் என்று கூறியிருந்தேன். நான் கிளிநொச்சி சென்று அவரை சந்திக்க இருந்தேன்.

எனினும் பிரபாகரன் இதற்கு எப்போதும் இணங்கவில்லை. விடுதலைப் புலிகளை போரில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மேற்குலக நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூட இதனை நம்பவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.