செய்தி விவரங்கள்

இந்து ஆலயங்களில் தடையை நோக்கி மிருக பலி !!!

இந்து ஆலயங்களில் தடையை நோக்கி மிருக பலி !!!

 

இலங்கையில் இந்து ஆலயங்களில் மிருக பலி கொடுப்பதை தடுக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்து ஆலயங்களில் மிருக பலியை தடை செய்யுமாறு இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.