செய்தி விவரங்கள்

இலங்கையில் ஆண்டு தோறும் இத்தனை பேர் தற்கொலையா ???

இலங்கையில் ஆண்டு தோறும் இத்தனை பேர் தற்கொலையா ???

 

இலங்கையில் ஆண்டு தோறும் 3000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக சுகாதார விரிவாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் 2017ஆம் ஆண்டில் அதிகளவான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில் 2,586 ஆண்களும், 677 பெண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தற்கொலைகளில் 19 வீதமானவை திருமண வாழ்க்கை குறித்த பல்வேறு பிரச்சினைகளினாலும், 11 வீதமானவை நீண்ட கால நோய்களினாலும் செய்து கொள்ளப்படுகின்றன. தற்கொலை செய்து கொள்வோரில் மூன்றில் ஒரு பகுதியினர் எதற்காக தற்கொலை செய்து கொள்கின்றார்கள் என்பது பற்றி தெரியவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.

மன அழுத்தம் காரணமாகவும் 10 வீதமானவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என குறித்த பிரிவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் உலக தற்கொலை தவிர்ப்பு தினமாக அனுட்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.