செய்தி விவரங்கள்

மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கும் திமுக !!!

மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதிக்கும் திமுக !!!

 

டிஜிபி ராஜேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் விஜயபாஸ்கர் இருவரையும் பதவி விலக கோரி வரும் திமுக சார்பில் 18ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் நடத்தப்படும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை அறிவாலயத்தில் தொடங்கியது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், 65 மாவட்டச் செயலாளர்கள், 4 எம்.பி.க்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 8 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அவையாவன,

1. ஊழலின் மொத்த உருவமான அ.தி.மு.க. அரசை ஒருபோதும் அனுமதியோம்!

2. வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவோம்!

3. காவிரி நீர் கடைமடைப் பகுதிகளுக்குச் செல்லவும்; கடலில் வீணே கலப்பதைத் தடுக்கவும் உடனே நடவடிக்கை தேவை !

4. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரை தாமதிக்காமல் விடுதலை செய்க!

5. பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து, 10ஆம் தேதி நடைபெறும் “பாரத் பந்த்” வெற்றி பெற ஒத்துழைப்போம்!

6. குட்கா ஊழலில் கொழித்த அமைச்சரை “டிஸ்மிஸ்” செய்க! டி.ஜி.பியைப் பதவி நீக்கம் செய்!

7. அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி தி.மு.கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

8. காவிமயமாகும் மத்திய பாஜக-வின் கனவுகளை நிராகரித்து வீழ்த்துவோம்.

முன்னதாக, குட்கா விவகாரத்தில் சிபிஐ சோதனைக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டுமென அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.