செய்தி விவரங்கள்

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ காட்சிகள் எங்கே?

ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ காட்சிகள் எங்கே?

 

தமிழக முன்னாள் முதல்வரும், மறைந்த அதிமுகவின் தலைவியான ஜெயலலிதா கடந்த 5 டிசம்பர் 2016 அன்று உடல்நலக்குறைவின் காரணமாக உயிரிழந்தார் என அவர் சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது. அதே சமயம், ஜெயாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும் எனவே ஜெயா மரணம் குறித்து நடுநிலையானதோர் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென பல தரப்புகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போதைய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியைக்கொண்டு ஜெயாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதி விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார். அந்த விசாரணை கமிஷன் விசாரணையை மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று விசாரணை கமிஷன் முன்னர் ஆஜரானவர்களை கேள்விகளால் துளைத்தெடுத்திருக்கிறது விசாரணை கமிஷன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையிலான சிசிடிவி காட்சிகள் தேவை எனவும், 7 நாட்களுக்காக ஜெ சிகிச்சை வீடியோ காட்சிகள் சமர்ப்பிக்க பட வேண்டும் அப்படி சிசிடிவி காட்சிகள் பதிவு செய்யப்பட வில்லை என்றால் அதற்கான உத்தரவினை வழங்கியது யார்? எனவும் அதிரடியாக கேள்வியெழுப்பியுள்ளது விசாரணை கமிஷன்.

முன்னதாக, ஜெ சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் குறித்து அப்போலோ நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.