செய்தி விவரங்கள்

அடுத்தது மஹிந்த அணி கண்டியில்தானாம் !!!

அடுத்தது மஹிந்த அணி கண்டியில்தானாம் !!!

 

கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த ஜனபலய எழுச்சி பேரணியை கண்டியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்து பேரணி நடைபெறும் தினம், இடம் மற்றும் ஏனைய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “நேற்று நடைபெற்ற பேரணியில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். நாம் நடத்திய பேரணி முழு அளவில் வெற்றியடைந்துள்ளது. அதன் மூலம் மக்கள் வழங்கியுள்ள செய்தியை அரசாங்கம் கேளிக்கையாக எடுக்க கூடாது. உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறும் அவர் சவால் விடுத்தார்.