செய்தி விவரங்கள்

சோபியாவை பயங்கரவாதியாக சித்தரிக்க பாஜக திட்டம் !!!

 
சோபியாவை பயங்கரவாதியாக சித்தரிக்க பாஜக திட்டம் !!!
 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை - தூத்துக்குடி விமான பயணத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டு நிகழ்வினை கண்டித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசையை நோக்கி முழக்கமிட்ட கனடாவில் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டிருக்கும் தூத்துக்குடி மாணவி சோபியா தமிழிசையின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் தலையீட்டால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
 
நாளை சோபியா அவரது ஒரிஜினல் பாஸ்போர்ட்டுடன் விசாரணைக்கு வர வேண்டுமென அவருக்கு தூத்துக்குடி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அது தொடர்பாக பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவருகின்றன.
 
காவல்துறை வட்டாரத்தில் நாம் பேசியபோது, தொடர்ச்சியாக பாஜகவை தமிழர் நலனுக்கு எதிரான சக்தியாக சித்தரிக்கும் வேலைகள் தமிழகத்தில் திருமுருகன் காந்தி, வேல்முருகன் உள்ளிட்டோரால் முன்னெடுக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரக்கூடிய சூழலில் அத்தகைய போக்கினை அனுமதிப்பது பாதகமாகிவிடும் என்ற காரணத்தினால் அத்தகையோர்கள் மீது காட்டமான நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்ததாகவும், அதன் பேரிலேயே திருமுருகன் காந்தி, வேல்முருகன் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
 
மேலும், பாஜக தலைமை முன்னிலையிலேயே அக்கட்சியினை விமர்சித்ததனை சற்றும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் உள்ள அக்கட்சி தலைமை இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு கிலி ஏற்படுத்த கூடியதாக இருந்திட வேண்டுமென கருதுவதாக தெரிகிறது என கூறினர். முன்னதாக, மாணவி சோபியா விடுதலைப் புலிகள் இயக்கத்தினை சேர்ந்தவர் என சுப்ரமணிய சாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.