செய்தி விவரங்கள்

இலங்கையில் அதி சக்திவாய்ந்த விமானம் சேவையில் !!! அப்படி என்னதான் இருக்கு ???

இலங்கையில் அதி சக்திவாய்ந்த விமானம் சேவையில் !!! அப்படி என்னதான் இருக்கு ???

 

இலங்கையின் தேசிய விமான சேவையான ’ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்’ சேவையில் மற்றுமொரு புதிய விமானம் நேற்றைய தினம் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை பிரிவில் நடைபெற்ற சர்வ மத நிகழ்வுகளுக்கு பின்னர் இந்த விமானம் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஐரோப்பாவின் எயார் பஸ் நிறுவனத்தின் ஏ321 நியோ ரக விமானமாகும். குறைந்த எரிபொருளுடன் செயற்படக்கூடியதுடன் காற்று தொடர்பில் சிறப்பாக செயற்படக்கூடிய தொழிநுட்ப வசதியை இது கொண்டுள்ளது.

இதன் நீளம் 146அடியாகவும் உயரம் 37.7 அடியாகவும் இருப்பதுடன் இறக்கைகள் 117.5 அடியையும் கொண்டுள்ளன. இந்த விமானத்தில் வர்த்தக வகுப்பில் 12 பேர் பயணிக்க முடியும் என்பதுடன் மொத்தம் 126 பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். அத்தோடு ஆறு பேரைக் கொண்ட பணியாளர்களுடன் இது பயணிக்கக் கூடியது. இந்த விமானத்தை ஜெர்மனியில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை விமானிகள் மற்றும் பொறியியலார்கள் சிலர் அங்கு சென்று விமானத்தை பரிசோதித்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் கட்டுநாயக்கவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விமானம் , சுமார் 3 மணித்தியாலங்களில் சீனா, டுபாய் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களிலேயே அதி சக்தி வாய்ந்த விமானமாக இது குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.