செய்தி விவரங்கள்

ஞானசாரர் காவி உடையை களைய உரிமை உண்டா ???

ஞானசாரர் காவி உடையை களைய உரிமை உண்டா ???

 

ஞானசார தேரரின் காவி உடையை களைய சிறை அதிகாரிகளுக்கு உரிமையில்லை, புத்த தர்மத்தின் படி தனது காவி உடையை பாதுகாத்துக்கொள்ள ஒரு பிக்குவுக்கு உரிமையுண்டு என பொது பல சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விதாரனந்தே தேரர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், சிறைவாசத்தின்போது தனது உடையை தக்க வைத்துக்கொள்ள ஞானசார தேரருக்கும் உரிமையுண்டு, எனினும் ஞானசார தேரரை திட்டமிட்டே பலிதீர்த்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராஜகிரியவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். என்ன நடந்தாலும் விரைவில் அவரை பிணையில் விடுவிக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.