செய்தி விவரங்கள்

நல்லூர் ஆலயத்தில் ஏற்பட்ட சோகம்

நல்லூர் ஆலயத்தில் ஏற்பட்ட சோகம்

 

யாழ். நல்லூரில் மின்சாரம் தாக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார். மேலும், சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பாவும், மகனும் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த ,சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா இன்று 20ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் திருவிழாவில் வெளிநாட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மின்சாரம் மற்றும் நீர் தொடர்பான துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு குறித்த அதிகாரிகளுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும், மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மக்களும் அவதானமாக செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.