செய்தி விவரங்கள்

கலைஞர் கருணாநிதியின் பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லையாம் !!!

கலைஞர் கருணாநிதியின் பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லையாம் !!!

 

திமுக தலைவர் கருணாநிதியின் பெயரில் எந்தவொரு அசையா சொத்துக்களும் இல்லை என தெரியவந்துள்ளது. இது குறித்த தகவலை பிரபல DNA பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி கருணாநிதி பெயரில் கார், வீடு மற்றும் இந்தவொரு விவசாய நிலமும் இல்லையாம்.

ஆனால் ரூ. 13.42 கோடிகள் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக அவருக்கு உள்ளதாக தெரிகிறது. அதே போல கருணாநிதியின் இரண்டாம் மனைவி தயாளு அம்மாளிடம் ரூ.15 கோடிகள் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது எனவும், மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாளிடம் ரூ. 42 கோடி அளவில் சொத்துக்கள் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. இந்த விவரங்களை கருணாநிதி கடந்த 2016 தேர்தலின் போது நியமனம் ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார்.