செய்தி விவரங்கள்

மறைந்த கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர் இரங்கல் !!!

மறைந்த கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர் இரங்கல் !!!

 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவால் இந்த இரங்கல் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த கருணாநிதிக்கு இலங்கை நாடாளுமன்றில் தமிழ் உறுப்பினர் இரங்கல் !!!

இதில் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது, இங்கிருந்து புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்த போது அவர்களை அன்புடன் வரவேற்ற இந்திய மக்களுக்கும், கருணாநிதிக்கும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ் மக்களுக்காகவும், இலங்கை தமிழ் மக்களுக்காகவும் கருணாநிதி பல சேவைகளை செய்துள்ளார்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை தமிழர்களுக்கு உணர்த்தியவர் இவர். அந்த வகையில் தற்போது எம்மை விட்டு பிரிந்து சென்ற கருணாநிதியின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவிப்பதாக டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.