செய்தி விவரங்கள்

திருமணம் செய்வதற்காக இப்படி எல்லாம் செய்வார்களா ???

திருமணம் செய்வதற்காக இப்படி எல்லாம் செய்வார்களா ???

 

தென்னிலங்கையில் திருமணம் செய்வதற்காக சந்தேக நபர்கள் இருவர் மிகவும் மோசமான காரியம் ஒன்றில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. குறித்த நபர்கள் திருமணத்திற்காக பாரிய வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவந்திருப்பதுடன், மூன்று மாதங்களின் பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பு பகுதியிலுள்ள வங்கி ஒன்றின் ஏரிஎம் இயந்திரத்தில் பணத்தை கொள்ளையிட்ட போது, இருவர் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். விசாரணைகள் தொடர்ந்துவந்த நிலையில் நேற்றைய தினம் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது 15லட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகிகளில் ஒருவரது திருமணத்திற்காக பணம் இல்லாத நிலையில் ஏ.ரி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் எடுக்க முடிவுசெய்ததாக விசாரணைகளின்போது தெரிவித்தனர். இதன்படி குறித்த பகுதியிலுள்ள ஏ.ரி.எம் இயந்திரத்தை உடைத்த அவர்கள் அதிலிருந்து 47 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.