செய்தி விவரங்கள்

இந்திய சாத்திரகாரர்களுக்கு யாழில் ஏற்பட்ட நிலை !!!

இந்திய சாத்திரகாரர்களுக்கு யாழில் ஏற்பட்ட நிலை !!!

 

இந்தியாவில் இருந்து வருகை தந்து யாழில் தங்கியிருந்த 5 சாத்திரகாரக்காரர்களை குடிவரவு திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று கைதுசெய்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு திணைக்கள அதிகாரிகள் யாழ்.நகரில் உள்ள பிரபல தங்குமிடத்தில் வைத்தே இந்த ஐந்து பேரையும் கைதுசெய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த இவர்கள் ஐந்து பேரும், கடவுச் சீட்டு காலம் நிறைவடைந்த பின்னரும் யாழில் தங்கியிருந்த குற்றச்சாட்டின்பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.