செய்தி விவரங்கள்

கலைஞருக்கு பால் வார்த்து அஞ்சலி செலுத்திய வைரமுத்து !!!

கலைஞருக்கு பால் வார்த்து அஞ்சலி செலுத்திய வைரமுத்து !!!

 

திமுக தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் ஆளுமையான கலைஞர் கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், தேசிய கட்சிகளின் கலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், லட்சக்கணக்கிலான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உடல் அங்கிருந்து மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பகுத்தறிவு - நாத்திகவாதியான கலைஞரின் உடல் எவ்வித சடங்குகளும் செய்யாமலேயே அடக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை கலைஞரின் சமாதிக்கு வந்த வைரமுத்து அங்கு பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மகன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிக் கடமையாக சமாதியில் பால் ஊற்றி செல்கிறேன். கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை நினைத்து பார்க்க முடியவில்லை. கருணாநிதி எழுதி வைத்த உயிலான சமூக நீதியை காப்பாற்றுவது தமிழ் சமுதாயத்தின் கடமை" என தெரிவித்து சென்றார்.