செய்தி விவரங்கள்

4 நாள் பேஸ்புக் காதல் - சிதைந்த 16 வருட குடும்ப வாழ்க்கை !!!

4 நாள் பேஸ்புக் காதல் - சிதைந்த 16 வருட குடும்ப வாழ்க்கை !!!

 

பேஸ்புக் காதலால் குடும்பம் ஒன்று சிதைந்து போயுள்ளதாக பெந்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வருடங்களாக சந்தோஷமாக இருந்த மனைவி, தனது கணவனை கைவிட்டுச் சென்றுள்ளார்.

4 நாட்களுக்கு முன்னர் பேஸ்புக் ஊடாக அறிந்து கொண்ட நபருக்காக குறித்த பெண் இவ்வாறு கணவனை கைவிட்டுள்ளார். 15 வயதுடைய மகள் உட்பட 3 பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய பெண் ஒருவரே இந்தத் தீர்மானத்திற்கு வந்துள்ளார். தனது மனைவியின் செயலை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன் கண்ணீர் விட்டு அழுத கணவனை சமாதானப்படுத்தி பொலிஸார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.