செய்தி விவரங்கள்

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் இருவர் பலி !!!

கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் இருவர் பலி !!!

 

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகி தற்போது அண்ணா நினைவிடத்தை நோக்கி இராணுவ வாகனத்தில் ஊர்வலம் செல்கிறது. இந்த நிலையில் அங்கு இலட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி வருகிறார்கள். ஆனால் இந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸ் திணறி வருகிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில் சில தொண்டர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தியது. கூட்டத்தை கலைப்பதற்காக பொலிஸ் தடியடி நடத்தியுள்ளது. இதன் காரணமாக அங்கு அதிக கூட்ட நெரிசல் காணப்படுகின்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் 26 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கருணாநிதியின் இறுதி ஊர்வலம் வாலாஜா சாலை வழியாக, அண்ணா சமாதி அமைந்துள்ள இடத்திற்கு செல்கின்றது.