செய்தி விவரங்கள்

விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு !!!

விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களுக்கு நீதிமன்றில் ஆஜராக உத்தரவு !!!

 

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.