செய்தி விவரங்கள்

கலைஞரின் இறுதி ஊர்வலம் எப்போது ???

கலைஞரின் இறுதி ஊர்வலம் எப்போது ???

 

மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணியளவில்ஆரம்பமாவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலம் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகாமையில் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவிருப்பதாக அந்த உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலம் இன்று மாலை 4.00 மணிளவில் இராணுவத்தின் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்படும். இதேவேளை கருணாநிதியின் உடலம் புதைக்கப்படவுள்ள இடத்தில் அதற்கான ஆயத்தங்கள் முழுவீச்சோடு நடைபெற்றுவருகின்றன.

மண்வாரிகளைக்கொண்டு குழி தோண்டப்பட்டுள்ளதுடன் குழியின் உள்ளே நான்கு பக்கமும் கொங்கரீற் சுவர்கள் எழுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் தற்போது அலங்கரிக்கப்பட்ட இராணுவ வாகனமும் வருகை தந்துள்ளது.