செய்தி விவரங்கள்

இலங்கையில் முதன்முறை வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை !!!

இலங்கையில் முதன்முறை வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திரசிகிச்சை !!!

 

அநுராதபுரம் வைத்தியசாலையில் நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. திடீர் விபத்து ஒன்றில் கால் ஒன்றை இழந்த இளைஞனுக்கு மூளை சாவடைந்த நபரின் பாதம் ஒன்று வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம், ராஜாங்கன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய இளைஞனுக்கே இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்த கசிவினால் மூளை சாவடைந்த 52 வயதுடைய நபரின் பாதமே குறித்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது. அனுராதபுரம் வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது தொடர்பான தகவல்கள் வெளியிட வைத்தியசாலை அனுமதிக்கவில்லை.

பொதுவாக இவ்வாறான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டால் ஒரு வருடம் வரை சிகிச்சை பெற வேண்டும். ஒரு வருடத்தின் பின்னரே இந்த சத்திரசிகிச்சையின் வெற்றி தொடர்பில் அறிந்த கொள்ள முடியும். இதன் காரணமாகவே தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

தற்போது இந்த சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை வைத்தியசாலைக்கு இந்த இளைஞன் நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு பாதம் பொருத்தும் சத்திரசிகிச்சை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பாதம் தானம் வழங்கிய நபரின் சிறுநீரகங்களும் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.