செய்தி விவரங்கள்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !!!

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு !!!

 

பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 6 ஆண்டுகளில் அனுபவிக்கும் படி 19 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசார தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுக்களிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கமைய, அவருக்கு 19 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஆறு ஆண்டுகளில் அனுபவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை, உடனடியாக சிறைச்சாலை பொறுப்பில் எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, ஞானசார தேரர் சிகிச்சை பெறும் ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு நீதிமன்ற அதிகாரிகள் சிலர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.