செய்தி விவரங்கள்

எங்களுக்கு ஐந்து சதமேனும் தேவையில்லை! மைத்திரி, ரணிலிடம் தமிழ் எம்.பி கோரிக்கை !

எங்களுக்கு ஐந்து சதமேனும் தேவையில்லை! மைத்திரி, ரணிலிடம் தமிழ் எம்.பி கோரிக்கை !

 

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களது சம்பளம் அதிகரிப்பு செய்யப்பட வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேலு சுரேஸ் தெரிவித்துள்ளார். மாறாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு ஐந்து சதமேனும் தேவையில்லை! மைத்திரி, ரணிலிடம் தமிழ் எம்.பி கோரிக்கை !

தொடர்ந்தும் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக பேசப்படுகின்றது. எனினும், எங்களுக்கு ஐந்து சதமேனும் சம்பள அதிகரிப்பு வேண்டாம். மாறாக மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மிக குறைவாகவே காணப்படுகின்றது. எனவே, அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒரு சிறந்த தீர்வை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.