செய்தி விவரங்கள்

இறந்த பின்பும் கருணாநிதிக்கு வெற்றி - மெரீனாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!

இறந்த பின்பும் கருணாநிதிக்கு வெற்றி - மெரீனாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவு!

 

கலைஞர் கருணாநிதி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

கலைஞரின் உடலை சென்னை மெரினா கடற்கரையில் அவரது வழிகாட்டி அண்ணாவின் நினைவிடம் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் கலைஞரின் குடும்பத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், சட்ட சிக்கல்கள் உள்ளதாக கூறி அதற்கு அனுமதி மறுத்தது அரசு. அதே சமயம், மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் மனுதாரர்களால் திரும்ப பெறப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அரசை கடுமையாக சாடிய நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கையில் மேற்கண்ட சட்ட சிக்கல்கள் எங்கே சென்றன எனவும் அரசுக்கு காட்டமாக கேள்வியெழுப்பியது.

மேலும், கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய எவ்வித தடையும் இல்லையென அதிரடியாக அனுமதி வழங்கியது நீதிமன்றம்.